Latest News

பிரதமர் மோடியை சந்திக்க… டெல்லி புறப்பட்டு சென்றார் முதல்வர் மு க ஸ்டாலின்…!

Published on

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திப்பதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி வரும் 27ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு க ஸ்டால அதற்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கின்றது.

இதனால் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றார். அதை தொடர்ந்து தற்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படி வலியுறுத்த உள்ளார்.

மேலும் விரிவான கோரிக்கை மனுவையும், இந்த சந்திப்பில் அளிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் மோடியை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு இடையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

 

Trending

Exit mobile version