மருத்துவ காலிபணியிடங்கள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்திருக்கின்றார்.
மருத்துவ துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்து இருக்கின்றார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது: “ஒரு துறையில் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு எடப்பாடி அவர்கள் பேச வேண்டும். போராடிய மருத்துவர்களுக்கு தண்டனையாக பணியிட மாற்றம் செய்தது அதிமுக அரசு .
ஆனால் திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1947 இல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் 700 க்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மூன்று ஆண்டுகளில் 36க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிடை மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசினால் சரியாக இருக்கும்” என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.

