Connect with us

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்த ஒரு வாரத்திற்கு…? வானிலை எச்சரிக்கை…!

Latest News

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்த ஒரு வாரத்திற்கு…? வானிலை எச்சரிக்கை…!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையுள்ளது. கடந்த வாரம் மத்திய வங்கக்கடலில் உருவான காற்று தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா அருகே கரையை கடக்கவுள்ளது.

இதனால் ஆந்திரா, தெலுங்கு மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 10-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

மேலும் மன்னார் வளைகுடா தென் மாவட்ட கடலோர பகுதிகளில் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளிலும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More in Latest News

To Top