Latest News

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு… வெளியான குட் நியூஸ்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

Published on

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.

பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களை ஆதிக்கவாதிகளிடமிருந்து காக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கி முன்னேறுவதற்கு வித்திட்ட சமூக நீதி காவலர் என்பது உலகறிந்த உண்மை.

அந்த பெருமகனார் உடல் உறுப்புகளையும் மனவளர்ச்சியும் குன்றிய நிலையில் வாழ்பவர்களுக்கு புது வாழ்வு அளிப்பதற்காக ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்று திறனாளிகள் என பெயர் தந்து அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கு தமிழக அரசின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என தனியே ஒரு துறையை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கி அவரது வாழ்வில் வளம் சேர்த்தார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டிய வழியில் முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கினார். தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 1000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2000 ரூபாய் எனவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும், 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 4000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகின்றது.

மேலும் கல்லூரி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 6000 ரூபாய் உதவி தொகையிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் என இரு மடங்காக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக ஆராய்ச்சி படிப்பிலும் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 50 மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆணை பிறப்பித்து இருக்கின்றார்.

Trending

Exit mobile version