Latest News
ஆயிரம் வாழைத்தார்களை நம் இதயத்தில் ஏற்றிவிட்டார்… மாரி செல்வராஜை பாராட்டிய முக ஸ்டாலின்…!
இயக்குனர் மாரி செல்வராஜ் ஆயிரம் வாழைத்தார்களை நம் இதயத்தில் ஏற்றி விட்டார் என்று முதல்வர் மு க ஸ்டாலின் புகழ்ந்து பேசி இருக்கின்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். இது அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்ததாவது” உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்ச்கோவில் கண்டு களித்தேன்.
படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துக்கள். பசியுடன் சிவனணைந்தான் தவித்த போது ஆயிரம் வாழைத்தார்களை நம் இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி செல்வராஜ். பசி கொடுமையை எந்த சிவனணைந்தனும் எதிர்கொள்ளக்கூடாது” என முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெறுகின்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கி பயணத்தை தொடர்வோம். தொடர்ந்து வெற்றி படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.