அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடியாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகளையும், அம்மா உணவகங்களையும் மூடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. 4.12.2021 அன்று அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரிந்த மருத்துவர்கள் நிறுத்தப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பாதாக எடப்பாடி கூறி இருக்கிறார்.

திமுக அரசின் செந்தில் பாலாஜி  கரூர் மாவட்டத்தில் அதிமுக காரர்களை மிரட்டுவதும், மாவட்ட கவுன்சிலர்களை மிரட்டி திமுகவில் சேர்ப்பதும் என அடாவடி செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

https://youtu.be/6Jjh3wCqkjI