தமிழ் சினிமாக்களில் பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். செலுத்திக்கொண்டு எல்லோரிடமும் பேட்டியும் கொடுத்தார்.
ஆனால் அதற்கு அடுத்த நாளே விவேக் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிதான் காரணம் என ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுனர்கள் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல அவருக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புதான் காரணம் என கூறியுள்ளனர்.

