Published
1 year agoon
ஆர்ட்டிகிள் 15 என்ற ஹிந்தி திரைப்படம் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் போனிகபூர் இப்படத்தை தமிழில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்க அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாயகன் உதயநிதி ஸ்டாலினை போனி கபூர் மற்றும் இணை தயாரிப்பாளரான ராகுல் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
“எனது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர், நிர்வாகத் தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ‘நெஞ்சுக்கு நீதி’ ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி” என தெரிவித்துள்ளார்.