பாடகர் டி.எம்.எஸ்க்கு முன்னாள் முதல்வர் புகழாரம்

பாடகர் டி.எம்.எஸ்க்கு முன்னாள் முதல்வர் புகழாரம்

1960களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக விளங்கியவர் டி.எம்.எஸ் எண்ணற்ற பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடியவர். எம்.ஜி.ஆர் , சிவாஜிக்கு இவரது பின்னணி குரல் பொருந்தியது.

இன்று டி.எம்.எஸ் அவர்களின் நினைவு நாள் இதையொட்டி முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டி.எம்.எஸ் நினைவு நாளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உட்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான,பிரத்யேக குரலில் பாடி,அவர்களின் முகம் ரசிகர்களின் மனதில் பதியுமாறு, பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடிய பன்முகத்தன்மைக் கொண்ட பத்ம ஸ்ரீ டி.எம்.எஸ் ஐயா அவர்களின் நினைவுநாளில் அவர்தம் சாதனைகளை நினைவுகூர்கிறேன் என அவர் கூறியுள்ளார்.