நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை புலி தென்படவில்லை. தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் நக்சல் தடுப்பு போலீசார் என நான்கு பிரிவுகளாக புலியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை வகையை சேர்ந்த அதவை என்ற மோப்ப நாயும் தேடுதல் வேட்டையில் உள்ளது.
எனினும் சில அமைப்பினர் புலியை சுட்டு பிடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேவ் டி23 டைகர் என டுவிட்டரில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

