கொரோனா பேரலை காரணமாக கடந்த சில மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டும் கோவில்கள் அடைக்கப்பட்டது.
இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று இது விசயமாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்கிறார்.
வரும் விஜயதசமி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

