உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் அன்று புதுப்பானையில் பொங்கலிட்டு அறுவடை செய்த தானியங்களான நெல், கரும்பு, மற்ற பயிர்களையும் இறைவனுக்கு படைத்து சூரிய வழிபாடு செய்வதே பொங்கல் பண்டிகையின் தாத்பரியமாகும்.

அடுத்த நாள் உழவனுக்கு உழைக்கும் பசு மாட்டுக்குரிய நாளாக அன்று பசுமாட்டுக்கு பொங்கல் வைத்து படைக்கப்படுகிறது.

இப்படி உயர்ந்ததொரு பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்துள்ளது. இதுவரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை முதல்வர் எடப்பாடி வரவேற்றுள்ளார்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.