இன்று இயக்குனர் சந்தானபாரதியின் பிறந்த நாள்

இன்று இயக்குனர் சந்தானபாரதியின் பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் தடம் பதித்த முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சந்தானபாரதி. அந்தக்கால இயக்குனர்களான ஸ்ரீதர் உட்பட பழமையான இயக்குனர்களிடம் சினிமா பயின்றவர் சந்தானபாரதி.

இவரும் இயக்குனர் பி. வாசுவும் ஆரம்பத்தில் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் படம் இயக்கினர். அதில் முக்கியமான படங்கள் , பன்னீர் புஷ்பங்கள், மற்றும் மெல்ல பேசுங்கள் உள்ளிட்ட படங்களாகும் பின்பு இருவரும் இணைந்து பல படங்களை தனியாக இயக்கினர்.

சந்தானபாரதி இயக்கிய முக்கிய படங்களில் குணா, மகாநதி, போன்றவை பெரிதும் பேசப்பட்டன. கமல்ஹாசனின் படங்களை இயக்கவோ இயக்காவிட்டாலும் கூட ஒரு வேடத்திலாவது சந்தானபாரதி நடித்து விடுவார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை சத்யராஜை வைத்து இயக்கினார் சந்தானபாரதி.

கரகாட்டக்காரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் வில்லனாகவும், ஆயுதம், அழகு ராஜா உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார் சந்தானபாரதி. இவர் முதன் முதலில் நடித்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது அந்த படம் தொட்டு கமலின் பெரும்பாலான படங்களில் இவரின் பங்கு பெருமளவு இருக்கும்.

இன்று இயக்குனர் சந்தானபாரதியின் பிறந்த நாள் ஆகும். அதை ஒட்டி அவரது மகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.