நடிகரும் பாரதிய ஜனதா உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி சேகர் ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறார். பல வருடங்களாக அனாதை பிணங்களை இலவசமாக அடக்கம் செய்து தரும் பணியை செய்து வருகிறார்.
இந்த சேவையை பல வருடங்களாக செய்து வரும் எஸ்.வி சேகர் இதை அதிகம் வெளியில் அதிகம் சொல்வதில்லை.
இந்நிலையில் எஸ்.வி சேகருக்கு இந்த சேவையில் நீண்ட வருடமாக உதவிகரமாக இருந்த அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மரணமடைந்தது அவரை வருத்தமடைய செய்துள்ளது. இது குறித்த அவரது பதிவு.
அனாதைப்பிணங்களை அடக்கம் செய்யும் மிக உயர்ந்த சேவையை செய்தவரும் என் போன்றவர் அதில் ஈடுபட காரணகர்த்தாவாக இருந்த லயன் சுவாமி இன்று காலை இயற்கை எய்தினார். பல ஆயிரக்கணக்கான ஆத்மாக்களை சாந்தியடையச் செய்த திரு சுவாமி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். ஓம் ஷாந்தி என கூறியுள்ளார் எஸ்.வி சேகர்.

