நடிகர் கார்த்திக் கடந்த 1989ம் ஆண்டு நடிகை ராகிணியை காதல் திருமணம் செய்து கொண்டார். சோலைக்குயில் படத்தில் ஊட்டியை சேர்ந்த பெண்ணான ராகிணிதான் ஹீரோயின். படத்தில் நடிக்கும்போது அப்பட ஹீரோவான கார்த்திக் ராகிணியை காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார் இது பழைய செய்தி என்றாலும். இப்படத்தை தயாரித்தபோது படத்தில் அதிக கவனம் தவிர்த்து கார்த்திக் எவ்வாறெல்லாம் காதலில் ஈடுபட்டார் என்பதை இப்படத்தின் தயாரிப்பாளரான பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி கூறியுள்ளார்.
குறிப்பாக கார்த்திக் தன் லவ்வரை சந்திக்க அங்க ரூம் வேணும் இங்க ரூம் வேணும்னு கேட்கும்போது சளைக்காமல் மாற்றி கொடுத்தாராம் தன் லவ்வருக்கும் தான் தங்கி இருக்கும் இடத்தில் ரூம் வேணும்னு கேட்கும்போது அதையும் செய்து கொடுத்தாராம். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் என்னா மாதிரி வேலை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு பாருங்க என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சொன்னார் அவர் சொன்னபோது சித்ரா லட்சுமணனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இது போல பல கார்த்திக் ரகசிய திருமணம் செய்து அவஸ்தைப்பட்ட தருணங்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தமிழ்மணி.