அந்தக்கால படங்களில் தந்திரக்காட்சிகள் என்றால் கூப்பிடுயா அந்த ரவிகாந்த் நிகாய்ச்ச என்று பாம்பேக்கு போன் போட்டு விடுவார்கள் போல படத்தயாரிப்பாளர்கள். அந்த அளவுக்கு அந்தக்காலத்தில் வந்த புராணப்படங்களில் , மாயாஜால படங்களில் ரவிகாந்த் நிகாய்ச்சின் கை வண்ணம் தந்திரக்காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளது.
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதம் செய்யும் அட்டாகாசம், பிரமாண்ட வாகனம் , அதில் வரும் மாயாஜால காட்சிகள் எல்லாம் ரவிகாந்த் நிகாய்ச்சின் கை வண்ணமே.
இவர் 80கள் வரை பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது இந்த ஸ்டில் சிவாஜிகணேசன் நடித்த ராஜரிஷி படத்தில் உள்ளது. நேற்று வந்த நடிகை லருந்து டிக் டாக் பிரபலங்கள் வரை விக்கி பீடியா கிரியேட் பண்ணி வச்சிருக்குது இந்த சினிமா உலகம் ஆனால் மிகச்சிறந்த கலைஞனை பற்றி எந்த தகவலும் இல்லை இணையத்தில்.
கம்ப்யூட்டர் இல்லாத அந்த காலத்தில் தந்திரக்காட்சிகள் எடுப்பது மிக சிரமமான வேலை. அதை சிரமேற்கொண்டு மிக தெளிவாக இயக்கிய ஜாம்பவானாக இவர் இருந்திருக்கிறார்.
இவர் சாண்டோ சின்னப்பா தேவரின் நண்பர் ஆவார் ஹிந்தி நடிகர் ராஜேஸ்கண்ணாவின் நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இவரை வைத்துதான் ராஜேஸ்கண்ணாவின் கால்ஷீட்டை சாண்டோ சின்னப்பா தேவர் வாங்கினார் என்பது மட்டுமே இவரை பற்றி டோட்டலாக இணையத்தில் உள்ள தகவலாக உள்ளது. வேறு எந்த புகைப்படமோ தகவலோ இல்லை.
மிகப்பெரிய ஒரு கலைஞர் பற்றி பத்திரிக்கையுலகமும் சினிமா உலகமும் மறந்தது கவலைக்குரிய விசயமாகும்.

