ஆஸ்தான இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

ஆஸ்தான இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பி. வாசு. இப்படத்தை சந்தானபாரதியுடன் இணைந்து பாரதிவாசு என்ற பெயரில் இயக்கினார். இதன் பிறகு மெல்லப்பேசுங்கள் என்ற படத்தையும் இயக்கினார்.

 

பிறகு என் தங்கச்சி படிச்சவ படத்தை தனியாக இயக்கினார். அதன் பிறகு சின்னத்தம்பி, வால்டர் வெற்றிவேல், மன்னன், உழைப்பாளி, என இவரின் சினிமா கிராஃப் எகிறியது. சந்திரமுகி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

சின்னத்தம்பி படத்தின் மூலம் நடிகை குஷ்புவின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் போனது. குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு தமிழர்கள் சென்றார்கள்.

இப்படியாக குஷ்புவின் மார்க்கெட் இவ்வளவு தூரம் உயரக்காரணமாக இருந்த தனது ஆஸ்தான இயக்குனர் பி. வாசுவுக்கு நடிகை குஷ்பு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கும் இயக்குனருக்கு எனது ஃபேவரைட் இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குஷ்பு கூறியுள்ளார்.