டிக் டாக் போலவே யூ டியூப் அறிமுகப்படுத்தியுள்ள தொழில் நுட்பம்

18

சீனாவை பூர்விகமாக கொண்ட டிக் டாக் எப்போது ஆண்ட்ராய்டுகளில் வர ஆரம்பித்ததோ அப்போதிருந்தே நம் ஆட்களை கையில் பிடிக்க முடியவில்லை.

 

ஆடல் பாடல் தன்னுடைய நடிப்புதிறமைகளை வெளிப்படுத்துதல் என பலருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது.

இதை வைத்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் இருந்தனர். இந்த அப்ளிகேசன் சீன நாட்டு தயாரிப்பு என்பதால் இது நம் நாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக டிக் டாக் செயலியை இந்திய அரசு தடை செய்தது.

இதனால் டிக் டாக் ஆர்வலர்கள் மிக சோர்வடைந்தனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் யூ டியூப் நிறுவனம் யூ டியூப் சார்ட்ஸ் என்ற வலைதளம் மற்றும் செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் 15 வினாடிகள் நாம் வீடியோக்களை பகிரலாம் என கூறப்படுகிறது.

பாருங்க:  யூ டியூபை பார்த்து துப்பாக்கி தயாரிக்க முயற்சி செய்த இரண்டு பேர் கைது