ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதுவும் கொரோனா ஏற்படுத்திய தடையால் இப்படம் ரொம்பவும் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு 6 மாதம் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில் இறுதிகட்ட காட்சிகள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
சொன்னபடி தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடுவதற்காக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

