Latest News
நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இவரை தெரியாத நபர்கள் இன்று இந்தியாவில் குறைவுதான்.
நீரஜ் சோப்ரா அரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்கேயே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது.