cinema news

தில் திரைப்படம் வந்து 20 வருடங்கள் ஆகிறது

Published on

விக்ரம் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 13ம் நாள் வெளியான திரைப்படம் தில். இப்படத்தை இயக்கி இருந்தவர் தரணி. அதற்கு முன் ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் படத்தை இயக்கி இருந்தாலும் இப்படமே இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

போலீசில் சேர துடிக்கும் இளைஞன் என்ன என்ன பிரச்சினைகளை சந்திக்கிறான். குறிப்பாக வெட்டு சங்கர் என்ற காவல் துறை அதிகாரியை பகைத்துக்கொண்டதற்காக எத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறான் என்று காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

படத்தின் திரைக்கதை மிக விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. விக்ரம், லைலா, விவேக், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது.வித்யாசாகர் இசை படத்துக்கு பலம் சேர்த்திருந்தது.

படத்தின் ப்ளஸ் ஆக இருந்தது வெட்டு சங்கராக நடித்திருந்த ஆசிஸ் வித்யார்த்தியின் நடிப்புதான் மிக வில்லத்தனமான போலீஸ் நடிப்பை ஆசிஸ் வெளிப்படுத்தி இருந்தார். ரசிகர்களால் இந்த கதாபாத்திரம் பாராட்டு பெற்றது.

இப்படம் வந்து நேற்றுடன் 20 வருடங்களாகிறது.

Trending

Exit mobile version