---Advertisement---

கிரிக்கெட் வீரர் மறைவு ஆர்.ஜே பாலாஜி வருத்தம்

Published on: September 25, 2020
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜி ஒரு நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் ரேடியோ வர்ணனையாளராக இருந்தார். இதனால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். அவர் நகைச்சுவையாக பேசியதால் பிரபலமடைந்தார்.

தற்போதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் . இதற்கு ஆர்.ஜே பாலாஜி கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

‘டீன் ஜோன்ஸின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். முந்தைய இரவு நானும் அவரும் ஒரே காரில் பயணித்தோம். இன்னும் என்னால் அவர் மறைவை நம்ப முடியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.