Latest News

அக்குளில் திடீர் மார்பகம் பெண் அதிர்ச்சி

Published on

கடவுள் படைப்பில் ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்து விடுகிறது. ஏதாவது எங்காவது ஒரு அதிசயத்தை இறைவன் படைப்பில் காண முடிகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் இந்த சம்பவம்.

போர்ச்சுகலை சேர்ந்தவர் 26 வயதே ஆன இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த 2வது நாளில் ஆரம்பித்து இவரின் வலது கை அக்குளில் திடீரென வலி  ஏற்படத் தொடங்கியது. அங்கிருந்து வெள்ளை நிற திரவமும் சுரந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதை பார்த்து பயந்து போன அப்பெண், லிஸ்பனில் உள்ள சாந்தா மரியா மரு்ததுவமனைக்கு சென்று பரிசோதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குகளில் அவருக்கு மூன்றாவது மார்பகம் இருப்பதை கண்டறிந்தனர். அதில் இருந்து சுரக்கும் திரவம், தாய்ப்பால் என்பதையும் உறுதி செய்தனர்.

உலகில் 6 சதவீதம் பெண்களுக்கு இதுபோன்ற அதிசயம் ஏற்படுவது வழக்கம் என்கின்றனர் மருத்துவர்கள். ‘மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும். சிலருக்கு பால் காம்பும் வளரும். ஒரு சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது. கர்ப்பம் தரிக்கும்போது தான், அக்குளில் இருக்கும் மார்பக செல்களும், பால் சுரப்பியும் செயல்படத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் பால் சுரக்கும். அப்போதுதான், தங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு குறை இருப்பதே, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியும். குழந்தை வளரத் தொடங்கியதும் தானாகவே அக்குள் மார்பகத்திலும் பால் சுரப்பது நின்று விடும். இந்த அரிய உடல் மாற்றத்துக்கு ‘பாலிமஸ்ஷியா’ என்று பெயர்,’ என்கின்றனர் மருத்துவர்கள்.

Trending

Exit mobile version