Latest News

பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு

Published on

சென்னையில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

சென்னை தி நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

இங்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்.

இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நீட்டை ஆதரித்து பேசியதால் வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.

Trending

Exit mobile version