தமிழகத்தில் மீண்டும் புயல் சின்னம்-கடும் மழை வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் புயல் சின்னம்-கடும் மழை வாய்ப்பு

தற்போதுதான் நிவர் புயல் மிரட்டி விட்டு சென்றது அதனால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டன. புயல் மழை வெள்ள சேதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த புயலின் சுவடு மறையும் முன்னரே புதியதாக வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 30ம் தேதி வலுப்பெறுகிறது.

இதனால் தென்மாவட்டங்களில் 1ம் தேதி முதல் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள் பலவற்றில் போதிய பருவமழை இந்த வருடம் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.