இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை மறைவு

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை மறைவு

சிறுத்தை படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து விவேகம், விசுவாசம், வேதாளம் என வி வரிசை படங்களாக இயக்கி அதுவும் முதல் படத்தை தவிர அனைத்து படங்களும் தல அஜீத் படங்களாய் இயக்கி புகழ்பெற்றவர் இவர்.

தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்தே படத்தை இயக்கி வருகிறார். இவரது தந்தை ஜெயக்குமார் திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

சிவாவுக்கு தமிழ் திரையுலக படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.