vijay prabhudeva prasanth
vijay prabhudeva prasanth

விசில் அடிச்சு அடிச்சே வாய் வலிக்குதப்பா!…விஜய் பாட்டுன்னா சும்மாவா?…

விஜயின் “கோட்”பட படப்பிடிப்பு மும்மூரமாக  நடத்தப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ வெளியானது. விஜய், பிரபுதேவா, பிரசாந்த் என மூவரும் துள்ளலாக ஆடும் பாடல் விடியோ வெளியிடப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கம் என்பதாலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாலும் ரசிகர்களின் நாடித்துடிப்பு பாடல் வெளிவரும்போது எகிறியே இருந்தது.

yuvan venkat
yuvan venkat

“விசில் போடு,விசில் போடு” பாடலைக் கேட்ட மறுநிமிடமே ரசிகர்கள் துள்ளிக்குதித்து, விசில் போட ஆரம்பித்து விட்டார்கள்.’அஜீத்’ன் 50வது படமான “மங்காத்தா”படத்தில் வரும் “இது அம்பானி பரம்பரை” பாடல் போலவே விஜய் பட பாடலும் இருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு வேறு விதமாக மாறி வருகிறது.

‘காதல் இளவரசனாக’ வலம் வந்த பிரசாந்தும் இதில் ஆடியிருக்கிறார். அவரின் வயது சற்றே தெரிந்தாலும், அவருடைய  நடனத்தை பார்க்கும் பொழுது பழைய பிரசாந்தை பார்ப்பது போலவே தான் இருந்தது.

“வில்லு” படத்திற்கு பிறகு விஜயும், பிரபுதேவாவும் இணைந்து நடனமாடியுள்ளனர்.விஜய் படம் என்றால் அதில் நிச்சயமாக ஒரு குத்து பாட்டு இடம் பெற்றிருக்கும். சில பாடல்களை அவரே பாடியும்யிருந்திருக்கிறார்.

vijay prabhudeva
vijay prabhudeva

தொடார்ந்து வலைதளங்களில் ஆதிக்கம்  செலுத்தி வருகிறது இந்த பாடல்.  ஆனால் ரசிகர்களின் வரவேற்பு சற்று சுமாராகத்தான் இருப்பதாகவும. அனிருத் அளவிற்கு பாட்டில் ஒரு ‘வைப்ரேஷன்’ இல்லை என்றும் வலைப்பேச்சு அந்தணன் சொல்லியிருக்கிறார்.

நடனம் என்றாலே அது பிரபு தேவா தான். அவர் ஆடியிருப்பதால் அனைவரின் கண்களும் விஜயை கவணிக்குமா? என்றும், இந்த படத்தில் மேலும் சில பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடித்தது போல இருக்கும். அந்த ஒரு நம்பிக்கையில் தான் விஜய் ரசிகர்கள்  இருப்பார்கள் என்றும் அந்தணன் கூறியுள்ளார்.