கிராமத்து படங்களில் கதாநாயகனாக நடித்து, அதே படங்களை இயக்கியும், தயாரித்தும் பெயர் பெற்றவர் ராஜ்கிரண். “என் ராசாவின் மனசிலே”, “எல்லாமே என் ராசாதான்”, “அரண்மனை கிளி” படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.
காலம் செல்ல, செல்ல கதாநாயகனாக நடித்த படங்களுக்கு வரவேற்பு குறைந்ததால், குணச்சித்திர நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார். “நந்தா” படத்தில் சூர்யாவுடனும், “சண்டைக்கோழி” படத்தில் விஷாலுடனும் நடித்திருந்தார்.

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவை “என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் இயக்குனராக்கியது ராஜ்கிரண். ஹரி இயக்கத்தில் தனுஷுடன் “வேங்கை” படத்தில் ராஜ்கிரண் நடித்தார். “பவர் பாண்டி” படத்திலும் தனுஷுடன் நடிக்க, அந்த பட சூட்டிங் போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ராஜ்கிரண்.
புகை பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ராஜ்கிரண், இடைவெளியில் அடிக்கடி ‘தம்’ அடிக்க சென்று விடுவாராம். உதவியாளர்கள் வந்து ‘சார் சாட் ரெடி வாறீர்களா’ எனஅழைப்பார்களாம். ரிலாக்ஸ் பண்ண முடியாமல் வேலைதான் முக்கியம் என்று சிகரெட்டை எறிந்து விட்டு வந்து விடுவாராம் ராஜ்கிரண்.
இப்படி அடிக்கடி நடந்து கொண்டிருக்க, தனுஷ் ஒரு முறை இதனை பார்த்திருக்கிறாராம். ராஜ்கிரணை அழைத்த உதவியாளரை கூப்பிட்டு அவரே வரும் வரை காத்திருக்க வேண்டியதுதானே, அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று சொன்னாராம்.
50, 100 நடிகர்களை வைத்து காட்சிகள் படமாக்கப்படும் பொழுது ராஜ்கிரண் மேல் யாரும் தெரியாமல் மோதி விட்டாலோ அல்லது உரசி விட்டு சென்றாலோ அவர்களை அடிக்க பாய்ந்து விடுவாராம் தனுஷ்.
தனது வயது, அனுபவத்திற்கான மரியாதையையும் சரியாக கொடுப்பாராம் . தனது குடும்ப உறுப்பினர் போல நினைத்து பழகுவாராம், அதே போல ராஜ்கிரண் மீது அதிக பாசமும், அன்பும் கொண்டவராம் தனுஷ்.