---Advertisement---

நவரச நாயகன் கார்த்திக்கை ஓரே வார்த்தையில் கலாய்த்த கவுண்ட்டர் மணி…

Published on: April 15, 2024
karthick goundamani
---Advertisement---

எந்த ஹீரோவோடு இணைந்து நடித்தாலும், அந்தப் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் அதிக அளவில் பேசப்படும் அதுவே கவுண்டமணியின் சிறப்பு.

ஹீரோக்களின் பாப்புலாரிட்டியை கண்டுகொள்ளாமல் எதார்த்தமாக அவர்களை கலாய்க்கும்  காட்சிகளில் முந்தி நிற்பார் இவர். ரஜினிகாந்தாக இருக்கட்டும்,  விஜயகாந்தாக இருக்கட்டும், இவ்வளவு ஏன் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களான அஜீத், விஜயாக கூட இருக்கட்டும் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் செந்திலை  எப்படியெல்லாம்  நக்கலடிப்பாரோ அதேபோலத்தான் இவர்களையும் கலாய்த்து இருந்திருக்கிறார்.

கவுண்டமணியுடன் நவரச நாயகன் கார்த்திக் “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற படங்களில் இணைந்து நடித்திருப்பார். “மேட்டுக்குடி” படத்தில் “காலிங்ஸ், காலிங்ஸ்” என அழைத்திருப்பார் கார்த்திக்.

நக்மாவின் காதலுக்காக கார்த்திக்கிடம் கெஞ்சும் கவுண்டமணி என  இப்படி கலாய்த்து தள்ளி இருப்பார்கள் ஒருவரை ஒருவர்.

karthick goundamani1
karthick goundamani1

“உனக்காக எல்லாம் உனக்காக” படத்தில் ‘இதுதான் இவன் கிட்ட பிடிக்காத கெட்ட பழக்கம்’ ன்னு சொல்லி வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சியில் கவுண்டமணி அசத்தியிருப்பார்.

இப்படி திரையில் பின்னி பிணைந்து நடித்த கார்த்திக்கும், கவுண்டமணியும் நிஜ வாழ்விலேயும் ஒருவர் மீது ஒருவர் அதிகமான அன்பும், மதிப்பும் கொண்டவர்களாகவும் இருந்து வருகின்றனர். நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகிய கார்த்திக் அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அரசியல் கட்சி துவங்கிய நேரத்தில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு முடித்துவிட்டு வந்த கார்த்திக்கிடம் என்ன தம்பி பயணம் எல்லாம் எப்படி இருந்தது? என கவுண்டமணி கேட்டுவிட்டு,”எதுக்கு” என அவரது பாணியிலே கேட்டு கலாய்த்தாராம்.

ஒரு பேட்டியில் கார்த்திக்கிடம் கேட்டபோது கவுண்டமணி, தனது அரசியல் வாழ்க்கை குறித்து இதைத்தவிர வேறு எதையும்  அவர் சொன்னதில்லை என சொல்லியிருக்கிறார்.

পড়তে ভুলবেন না

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்

சிரஞ்சீவி புனாதி ராள்ளு படப்பிடிப்பு தளப் புகைப்படம்

மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி: ‘புனாதி ராள்ளு’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நினைவுகள்!