“பணக்காரன்”, “சிவா”, “குருசிஷ்யன்” படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் எம்.ஆர்.ராதாவின் மகனான ராதாரவி. வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
ரஜினியை ஒரு முறை வாடா, போடா என ஒருமுறை அழைத்தாராம். அதற்கு அங்கிருந்த உதவி இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்ததாராம். இப்படி ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் நடைபெற்றது “முத்து” படபிடிப்பின் போது தானாம்.

படத்தில் வேலைக்காரனாக நடித்திருப்பார் ரஜினி. தனது முதலாளியின் மீது வைத்திருந்த அதிக பாசத்தால் ராதாரவியை ரஜினி எதிர்க்க நேர்ந்திருக்கும். அந்த காட்சிகள் படமாக்கப்படும் போது ரஜினியை பார்த்து டேய் முத்து வாடா போட என வசனம் சொல்லவேண்டியது இருந்ததாம். அதே போல ராதாரவியும் பேசினாராம்.
இல்ல சார் நீங்க போடான்னு எல்லாம் ரஜினியை சொல்ல வேண்டும் வா, போன்னு மட்டும் பேசுங்க என அருகிலிருந்த உதவி இயக்குனர் ஸ்டிரிக்டாக சொன்னாராம். ராதாரவி நேரடியாக ரஜினியிடம் சென்று நா உங்களை வாடா, போடான்னு சொல்றதனால உங்களுக்கு ஏதும் பிரச்சனையா என கேட்டுவிட்டாராம்.
அதற்கு ரஜினியோ எப்பவும் போல பெருந்தன்மையாக அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்லை காட்சி நன்றாக வந்தால் போதும் என்றாராம். பிறகே படப்பிடிப்பு நடந்ததாக ராதாரவியே தனது பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். “முத்து” படத்தை கே.எஸ்,ரவிக்குமார் இயக்கியிருந்தார்,
இதே கூட்டணியில் வெளிவந்த படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்கு அப்பாவாக நடித்திருந்தார் ராதாராவி. ராதாரவிக்கு தங்கையாக ரஜினிக்கு அம்மாவாக லட்சுமி நடித்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மனைவியாக லட்சுமி நடித்திருந்தார் என்பதே அதிகமாக ரசிக்கப்பட்டிருந்த ஒன்றாகவும் இருந்தது “படையப்பா” வில்.