Latest News
அந்த மாதிரி படமா ராயன்?… நோ சேஞ்சஸ்…கண்டிசன் போட்ட தயாரிப்பாளர்…
கோலிவுட்டின் லேடஸ்ட் வைரல் டாக் “ராயன்” பட ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசியதும், “டீன்ஸ்” பட விழாவில் பார்த்திபன் பேசியதும் தான். பார்த்திபன் தனக்கு சொந்தமாக வீடு கிடையாது என சொன்னார். தனுஷோ பதினாரு வயதில் ரஜினியின் வீட்டை பார்த்து தானும் அதே ஏரியாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என ஆசையை வளர்த்ததாகவும்.
ஆனால் இப்போது ஏன் போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கினோம் என நினைத்து வருவதாக பேசியதும் தான். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது தனுஷ் நடித்துள்ள “ராயன்”. இந்த படத்தின் மூலம் தனுஷ் தனது திரை வாழவில் ஐம்பதாவது படத்தில் அடி எடுத்து வைக்கிறார்.
“ராயன்” படத்தின் இயக்குனரும் இவரே தான். போதாக்குறைக்கு படத்தில் பாடலையும் பாடிவேற இருக்கிறார். தான் நடிக்கும் படங்களில் தனது குரலில் ஒரு பாடலையாவது பாடுவதை பழக்கமாக வைத்து வருகிறார் தனுஷ். அந்த பழக்கத்தை “ராயன்” படத்திலும் கடைபிடித்திருக்கிறார்.
அதோடு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்த பிறகு காட்சி ஒன்றை கூட விடாமல் பார்த்திருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி மாறன். காட்சிகளால் கவரப்பட்ட இவர் படத்தில் எந்த காட்சிகளையும் மாற்ற வேண்டாம் நோ சேஞ்சஸ் என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம்.
சாட்டிலைட் ரைட்சை பற்றி எல்லாம் தயாநிதி மாறன் கவலை கொள்ள மாட்டார், காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்றும் அந்தணன் சொல்லியிருந்தார்.