cinema news

விஸ்வநாதனை கடுப்பேற்றிய எம்.ஜி.ஆர்!…தந்திரத்தில் வீழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர்?…

Published on

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனை தான் இசையமைப்பாளராக முதன் முதலில் நியமித்திருந்தார் எம்.ஜி.ஆர். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எத்தனை மெட்டுக்களை எப்படி போட்டுக் கொடுத்தாலும் அது திருப்தி இல்லை, அது சரி இல்லை, இது சரி இல்லை என எம்.ஜி.ஆர் குற்றம் கண்டுபிடிக்கும் முன்னர் தனது திறமைகள் அத்தனையும் காட்டி அவரிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என படத்திற்கு இசையமைக்க துவங்கினாராம்.

ரெக்கார்டிங் எல்லாம் முடிந்த பிறகு அந்த பாடல்களை கேட்டு அனைவரும் புகழ்ந்து தள்ள எம்.ஜி.ஆர் மட்டும் அமைதியாக இருந்திருக்கிறார். படத்தின் காட்சிள் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டவை என்பதனால் பல விதமான இசைக்கருவிகளை பயன்படுத்தி இருந்திருக்கிறார் எம்.எஸ்.வி.

 

நாம் நினைத்தது போல எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் பிடிக்கவில்லையோ?, அதனால் தான் அவர் இவ்வளவு சைலென்ட்டாக அமர்ந்திருக்கிறாரோ?. அதனால் தான் தன்னையே உற்று நோக்கியே பார்க்கிறாரோ?  என சிந்தித்துக்கொண்டிருந்த எம்.எஸ்.விஸ்வநாதருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் கழுத்தில் திடீரென ஒரு மாலையை போட்டு விட்டு, ஒரு பை நிறைய பணத்தை கொடுத்து நான் உங்களது மெட்டுக்கள் சரியில்லை என்று சொன்னதினால் தான் நீங்கள் அதிக சிரமம் எடுத்து இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பாடல்களை கொடுத்துள்ளீர்கள்.

நான் மட்டும் உங்களிடம் கோபிக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என சொல்லியிருக்கிறார். அதோடு பாடல்கள எல்லாம் தான் எதிர்பர்த்தது போலவே அமைந்து தன்னை திருப்தியடையைச்செய்ததாக சொல்லி மனதார பாராட்டினராம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை.

Trending

Exit mobile version