cinema news
அடேங்கப்பா என்ன டான்சு…பேய் கூட பார்த்து ரசிக்குமோ?, வெளியான அரண்மனை4 பட பாடல்…
ரஜினி,கமல்,அஜீத்,கார்த்திக் போன்ற முன்னணி கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி. சமீபத்தில் தனது சினிமா இயக்க பார்முலாவை மாற்றி வருகிறார்.
நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த இவர். தற் பொழுது “ஹாரர்” படங்களை எடுத்து வந்து சினிமா பிரியர்களை பயம் காட்டி வருகிறார். அரண்மனை படத்தின் மூலம் பேய் கதாபாத்திரங்களை தனது படங்களில் திரைக்கு கொண்டுவநதார்.
அரண்மனை படத்தின் “3” பாகங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றி , திரிஷா, ஹன்சிகா மோத்வானியை கூட பேய் கதாபாத்திர்ஙகளாக மாற்றி வெற்றி கண்டவர்.
விஜயசேதுபாதியை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுக்கவே முதலில் உருவாக்கப்பட்ட கதை, கால்ஷீட் பிரச்சனையால் இவர்கள் இருவரும் இணைய முடியாமல் போன நிலையில் தான் அரண்மனை “4” படம் எடுக்கப்பட்டது.
தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, வி.டி.வி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்கப்பட்டுள்ள அரண்மனை”4″ன் ப்ரமோஷன் பாடல் வெளியாகியுள்ளது.
தமன்னாவும், ராஷி கண்ணாவும் இணைந்து ஆடுவது இந்த பாடலை பார்த்த ரசிகர்களை படத்தில் இவர்கள் பங்களிப்பு என்னவானாக இருக்கும்?, படத்தின் காட்சிகள் எப்படிஅமைக்கப்பட்டிருக்கும் என்கின்ற கற்பனையில் மிதக்க துவங்க வைத்து விட்டது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் வெற்றிப்படமான “ஜெயிலர்” படத்தில் ‘நூ காவாலைய்யா’பாடல் போல இந்த படத்திலேயும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தலையை காட்டிவிட்டு தங்களை ஏக்கத்தில் ஆழ்த்திவிட்டது சென்றுவிடுவாரா? படம் முழுக்க வந்து மகிழ்சசி கொடுப்பாரா? என தமன்னாவை நினைத்து ஏங்கி தவிக்கும் நிலையை தான் ரசிகர்களுக்கு இந்த ‘ப்ரமோ’ பாடல் கொடுத்துள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகிறது.