cinema news
அடடே அனீருத்தே தான்….என்னா சாங்குயா!…இந்தியன் 2ல சித்தார்த் தான் ஸ்கோர் பண்ணபோறாரோ?….
உலகமே “இந்தியன்-2” படத்தை அதிகமாக எதிர்பார்த்துள்ளது. அடுத்த மாதம் படம் வெளிவரப்போகிறது என்ற ஆனந்தத்தில் கமலின் ரசிகர்கள். 2கே கிட்ஸுக்கு ஏற்றார் போல கதை இருக்குமா?. குடும்ப ஆடியன்ஸ்களை விட தியேட்டர்களை இப்போது இந்த 2கே கிட்ஸும், புள்ளிங்கோ’ஸும் தான் ஆக்கிரமித்துக்கொண்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடலான “பாரா” பாடல் வெளியானது. இப்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பம் நீரிலில்லை,…நீயின்றி நானில்லை’ பாடல் வெளியாகியுள்ளது.
தாமரை பாடலை எழுதியுள்ளார். அப்பி.வி, ஸ்ருதிகா சமுத்ராலா இந்த பாடலை பாடியுள்ளனர். சித்தார்த், ரகுல் பிரீத் சிங் இருவருக்கான பாடலாக இது இருக்கலாம் என்பது போலவே தான் பாடலை இருப்பது போல தெரிகிறது.
அப்பா விட்டு, விட்டுப்போன வேலையை மகன் செய்வார். அதனால் அது முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாகத்தான் இருக்கும் என அடித்து சொல்லமுடியும் மற்ற படங்களில்.
ஆனால் இந்த படத்தில் “இந்தியன்” தாத்தா கமலின் வாரிசுகளான மகள் கஸ்தூரி, மகன் சந்துரு கமல் இருவரும் இறந்து விட்டனர். வெளி நாட்டில் “இந்தியன்” கமல் செட்டில் ஆவது போல முடித்திருந்தார் முதல் பாகத்தை ஷங்கர். ஆகையால் படம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இப்போது வெளிவந்து பாடல் சித்தார்திற்காணது என்றிருந்தால், அது கதையை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது போலேவே அமைந்துள்ளது. ‘மெலடி’ பாடலாக வந்துள்ள ‘நீலோற்பம்’ ப்ரமோ வீடியோ நேற்று மாலை வெளியன நிலையில் இப்போது முழுப்பாடலையும் வெளியிட்டு உள்ளது படக்குழு.