நடிகர் தவசி இவரை தினம் தோறும் பார்க்காத நபர்கள் இருக்க முடியாது. தினமும் காமெடி சேனல் ஏதாவது ஒன்றில் இவர் நடித்த கருப்பன் குசும்புக்காரன் காமெடி வந்து கொண்டு இருக்கும் கிழக்கு சீமையிலே படத்தில் இருந்து கடந்த 25 வருடத்துக்கு மேலாக இவர் நடித்தாலும் இந்த காமெடிதான் இவரை பிரபலமாக்கியது.
இவருக்கு திடீரென புற்றுநோய் தாக்கியது. இந்த புற்றுநோய் பற்றிய செய்திகள் ஊடகங்களில் அதிகம் வந்தது இவர் மருத்துவ செலவுக்கு பலரும் பணம் அனுப்பி வரும் நிலையில் இவருடன் நடித்த நெருங்கிய நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் சூரி 20000மும் சிவகார்த்திகேயன் 25000மும் கொடுத்து நடிகர் தவசியின் மருத்து செலவுக்கு கொடுத்துள்ளனர்.







