சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ள சூரரை போற்று படம் மிக அருமையாக உள்ளது என நேற்று இரவு முதல் அமேசான் ப்ரைமில் படம் பார்த்த அனைவரும் கூறுகிறார்கள்.
பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் விமான நிறுவனத்தை உருவாக்கிய கோபிநாத் என்பவரின் கதை இது சூர்யா மிரட்டி இருக்கிறார். நடிப்பு ராட்சஷன் என்றெல்லாம் சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
டுவிட்டரிலும் இப்பட வெற்றி ட்ரெண்டாகி வரும் நிலையில் இப்படத்தின் விமானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாமரர்கள் பலருக்கும் தெரியாது என்றும் படம் மெதுவாக நகர்வது போல் இருக்கிறது என்றும் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.







