---Advertisement---

Sivakarthikeyan x Tamilarasan : லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் எஸ்கே – ரெட் ஜெயன்ட் போடும் மெகா பிளான்!

Published on: April 7, 2026
Director Tamilarasan Pachamuthu of the movie Lubber Pandhu featuring in a dynamic poster.
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியிருக்கிறார் ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சைமுத்து. தனது முதல் படத்திலேயே எமோஷன் மற்றும் கிரிக்கெட்டை கலந்து கட்டி ஹிட் கொடுத்த இவருடன் இணைய டாப் ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்போது சிவகார்த்திகேயன் மற்றும் தமிழரசன் பச்சைமுத்து கூட்டணி அமையவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லப்பர் பந்து படத்தை ரெட் ஜெயன்ட் தான் விநியோகம் செய்திருந்தது, அந்தப் படத்தின் மேக்கிங் அவர்களுக்குப் பிடித்துப் போனதால் இந்த மெகா கூட்டணியை அவர்கள் ஒருங்கிணைப்பதாகத் தெரிகிறது. தற்போது இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Sivakarthikeyan and Director Tamilarasan Pachamuthu joining hands for a new project under Red Giant Movies.
லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது தனுஷின் 56-வது படத்தை இயக்கும் பணிகளில் தமிழரசன் பச்சைமுத்து படு பிஸியாக உள்ளார் மற்றும் தனுஷ்  படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் தமிழரசன் இறங்கிவிட்டார். அந்தப் படத்தை முடித்த பிறகுதான், சிவகார்த்திகேயன் படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மற்றும் எஸ்கே என அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களை வைத்துத் தமிழரசன் படம் இயக்குவது அவரது கேரியரில் ஒரு பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  2026 Kollywood Lineup : மிஸ்டர் எக்ஸ் முதல் ஜனநாயகன் வரை - நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத படங்கள்!

தமிழரசன் பச்சைமுத்துவுடனான இந்தப் புதிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?