---Advertisement---

ரத்த களறியாக மாறிய துருக்கி பாராளுமன்றம்… எதிர்க்கட்சி எம்பி சொன்ன வார்த்தையால் நடந்த விபரீதம்…!

By Sri
Published on: August 18, 2024
---Advertisement---

துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஏற்பாடு தொடர்பாக எதிர்க்கட்சியை சேர்ந்த தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் இருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்பி அகமது சிக் கூறும்போது அதிபர் எடோனின் ஆளும் பயங்கரவாத அமைப்பு என்று தெரிவித்திருந்தார்.

உங்களுக்கு ஆதரவாக இல்லை என்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள். ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று ஆளும் கட்சி எம்பிகளை சுட்டிக்காட்டி பேசி இருந்தார். இதனால் ஆளும் கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் இருந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்பி ஒருவர் திடீரென்று ஓடி சென்று பேசிக்கொண்டு இருந்த அகமது சிக்கன் முகத்தில் தாக்கினார்.

தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் கைகளப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்பிக்கள் மாறி மாறி தாக்கி கொண்டார்கள். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் விலக்கி விட்டார்கள். இருப்பினும் இந்த தாக்குதலில் பெண் எம்பி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே ரத்தக் களறியாக மாறிவிட்டது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.