---Advertisement---

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான் – வெளியான ஆதாரம்

By Sri
Published on: September 21, 2019
kamal
---Advertisement---

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் கவின், லாஸ்லியான் சேரன், ஷெரின் ஆகிய நால்வரில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்பட உள்ளார். இந்த வார நாமிஷேனில் கவின், சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் உள்ளனர்.

எனவே, அதற்கான வாக்கெடுப்பும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவின் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்திலும், சேரன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் லாஸ்லியா மூன்றாம் இடத்திலும், குறைவான வாக்குகளை பெற்று நடிகை ஷெரின் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

vote

எனவே, அதன் அடிப்படையில் ஷெரின் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், பினாலே டாஸ்கில் ஷெரின் நன்றாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்றுவருகிறார். ஆனாலும், ஷெரினுக்கு மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த வாரம் அவரே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.