---Advertisement---

ஷாருக் மகனுக்கு ஆதரவாக ஹ்ரித்திக் ரோஷன்

Published on: October 8, 2021
---Advertisement---

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாரூக் கான் மகனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்குச் சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆர்யன் கான் கைதால் தனது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் ஒத்திவைத்துள்ளார் ஷாரூக் கான்.

தற்போது ஆர்யன் கானுக்கு ஆதரவாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“என் இனிய ஆர்யன்,

வாழ்க்கை என்னும் சவாரி வினோதமானது. அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக இருக்கிறது. நம்மிடம் அது பிரச்சினைகளை வீசுவதால்தான் உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால், கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களைத் தருவார்.

இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை, ஆ.. உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவரத் தேவையான விஷயங்கள் இவையே.

ஆனால், அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு ஆகிய நல்லவற்றையும் கூட எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. போதுமான அளவு உனக்குள் கொழுந்து எரியட்டும். உன் அனுபவத்தில் கிடைக்கும் விஷயங்களில் எதை வைத்துக்கொள்ள வேண்டும், எதைத் தூக்கியெறிய வேண்டும் என்று உனக்குத் தெரிந்தால் தவறுகள், தோல்விகள், வெற்றிகள் எல்லாம் ஒன்றுதான் என்பதும் உனக்குப் புரியும்.

ஆனால், இவற்றோடு உன்னால் நன்றாக முதிர்ச்சியடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைச் சிறுவனாகவும், வளர்ந்த ஆண் பிள்ளையாகவும் எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நீதான் பொறுப்பு என்று அவற்றை ஏற்றுக்கொள். எல்லா அனுபவங்களையும் ஏற்றுக்கொள். அவைதான் உனக்கான பரிசுகள்.

ஒரு கட்டத்தில் எல்லாம் உனக்குப் புரியும்போது இவற்றின் அர்த்தமும் உனக்குப் புரியும். அனைத்தையும் நன்றாகக் கவனி. இந்தத் தருணங்கள்தான் உன்னை உருவாக்கும். உனக்கான சிறப்பான காலம் காத்திருக்கிறது.

ஆனால், அந்த வெளிச்சத்துக்கு முன்னால் நீ இருட்டைக் கடந்தாக வேண்டும். அமைதியாக இரு. அனைத்தையும் ஏற்றுக்கொள். வெளிச்சத்தை நம்பு. உனக்குள் இருக்கும் வெளிச்சத்தையும்”.

இவ்வாறு ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Multi-split analytical grid tracking actress Trisha and Chief Minister Vijay highlighting the viral Instagram unfollow move amid Sangeetha divorce case.

“அந்த ஒரு காரணத்தால்தான் அன்ஃபாலோ பண்ணிட்டாங்களோ?!”.. விவாகரத்து வழக்கிற்கு நடுவே விஜய்யின் 52வது பிறந்தநாளை புறக்கணித்த த்ரிஷா.. கோலிவுட்டையே உலுக்கிய அதிரடி ‘பிரேக்கப்’ வதந்தி!

Megastar Chiranjeevi along with his wife Surekha gifting a traditional saree to actress Samantha and greeting director Raj Nidimoru for Maa Inti Bangaaram success.

“புடவை கட்டிக்கிட்டு சாடிசம் பண்ற சீன் அற்புதம்!”.. ‘மா இண்டி பங்காரம்’ டீமிற்கு மெகாஸ்டார் கொடுத்த மெகா வாழ்த்து.. சமந்தா – ராஜ் தம்பதியின் ‘புதிய சாப்டரை’ வரவேற்ற சிரஞ்சீவி!

Official visual still from Baahubali The Eternal War animated movie presented by SS Rajamouli at the Annecy International Animation Film Festival 2026.

“அனிமேஷன் உலகையே ஆளப்போகும் மகிழ்மதி!”.. உலக கான்ஸ் மேடையில் கெத்தாக நுழைந்த ‘பாகுபலி தி எடர்னல் வார்’.. புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து மெகா சாதனை!

Bollywood actor Hrithik Roshan captured landing at Chennai airport for shooting his special action cameo in Superstar Rajinikanth's Jailer 2.

“தியேட்டர்கள் தவம் கிடக்கப் போகுது!”.. சத்தமில்லாமல் சென்னை வந்திறங்கிய ஹிருத்திக் ரோஷன்.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நெல்சன் லாக் செய்த பாலிவுட் ‘சம்பவம்’ இதோ!

Actress Samantha Ruth Prabhu with her husband Raj Nidimoru at Maa Inti Bangaaram success meet highlighting her baby bump.

“அந்தப் புகைப்படம் உண்மைதான்.. சமந்தா அம்மா ஆகப்போறாங்க!”.. ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மத்தியில் சமந்தாவின் கர்ப்பத்தை உறுதி செய்த இயக்குநர் நந்தினி ரெட்டி!

Director Perarasu issuing an official request to Chief Minister Vijay regarding cinema theatre food items price monitoring systems.

“பாப்கார்ன் வாங்குற காசுல ஒரு தியேட்டர் டிக்கெட்டே வாங்கிடலாம்!”.. திரையரங்கு உணவுப் பொருட்கள் விலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுக்குக் கோரிக்கை.. முதல்வர் விஜயிடம் இயக்குநர் பேரரசு வைத்த மெகா டிமாண்ட்!