---Advertisement---

அவனுங்கள எல்லாம் செருப்பால் அடிக்கணும்… தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் – நடிகர் விஷால்..!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருக்கின்றார்.

மலையாள சினிமாவில் தற்போது ஹேமா கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்க செயலாளர் விஷால் தெரிவித்து இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிக கவனமாக, உஷாராக இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

தமிழ் சினிமாவில் பத்து பேர் கொண்ட குழு உடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகின்றது. தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றதா இல்லையா என்று என்னால் கூற முடியாது. சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20 சதவீதம் பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கின்றது. 80 சதவீதம் பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றுபவரை செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்” என்று விஷால் கூறி இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!