---Advertisement---

குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதும் கூட்டம்…ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….

Published on: June 30, 2024
courtallam
---Advertisement---

ஜூன், ஜூலை மாதங்கள் வந்து விட்டாலே சுற்றுலா பிரியர்கள் அனைவரின் பார்வையையும் தன் மீது திரும்ப வைத்து விடும் குற்றாலம். தமிழகம் மட்டும் அல்ல சீசன் நேரத்தில் இங்கு குளித்து நீராடி மகிழ நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாய் மக்கள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க துவங்கிவிடுவார்கள்.

இந்தாண்டு குற்றாலத்தில் சீசன் துவங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது. கடந்த வார துவக்கத்தில் எல்லா அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

(இன்று காலையில் எடுக்கப்பட்ட படம்)

FALLS
FALLS

யதார்த்த நிலை அடைந்த பிறகே குளிப்பதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையானது நீக்கப்பட்டு, பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் கடந்த வாரத்தில் குற்றால சீசனில் திடீர், திடீர்  மாற்றங்கள் இருந்து வந்தது. சொல்லப்போனல் வியாழக்கிழமைக்கு பிறகே அங்கு சுற்றுலா  பயணிகளின் எண்ணங்கள் நிறைவேறியது. அதற்கு முன் அடிக்கடி குளிக்க தடை விதிக்கப்பட்டும் வந்தது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் இன்று காலை பதினோரு மனி நிலவரப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

வெயிலின் தாக்கம் சிறிது குறைவாகவே உள்ளது. பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் சாரல், காற்று, குளிர்ந்த சூழல் இல்லாத போதும் அருவிகளில் விழுந்து வரும் தண்ணீர் குளிக்க வந்தவர்களை ஆனந்தப்படுத்தி வருகிறது. விடுமுறை தினம் இன்று என்பதால் நேரம்  செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!