---Advertisement---

ஐபிஎல் பற்றி மறந்துவிடுங்கள்- சவுரவ் கங்குலி பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

By Sri
Published on: April 13, 2020
---Advertisement---

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்று சந்தேகம் எழுந்த நிலையில் அதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ இப்போதுள்ள நிலைமையில் எப்படி வெளிநாடுகளில் இருந்து வீரர்களைக் கொண்டு வருவீர்கள். மே மாதத்தின் நடுப்பகுதி வரை இப்படிதான் நிலைமை இருக்கும். தற்போதைய நிலைமை உலகின் எந்தவொரு விளையாட்டுக்கும் சாதகமானதாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Social media star Amala Shaji making her acting debut in Vikram Prabhu's upcoming film.

Amala Shaji Acting Debut: பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி என்ட்ரி: விக்ரம் பிரபு படத்துடன் நடிகையாக அறிமுகம் – செம குஷியில் ரசிகர்கள்!

Actor GV Prakash sharing insights about his upcoming pan-India vampire movie Immortal during a press meet.

GV Prakash Reveals About Immortal: இந்திய சினிமாவுக்கே இது புதுசு: ‘இம்மார்டல்’ படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ஷாக் தகவல்!

Official shooting wrap concept poster for the emotional family drama Thagappan.

Thagappan Shooting Wrapped Up: ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு உணர்வு: நிறைவடைந்தது ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு – டிசம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Concept graphic representing the upcoming collaboration between director Siruthai Siva and actor Dhanush.

Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!

பிறக்கப் போகும் குழந்தை குறித்து சமந்தா அளித்த பதில் குறித்த வைரல் தகவல்.

Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!