---Advertisement---

பிரிந்த இசையும் நாதமும்?…கலங்கி நிற்கும் கோடம்பாக்கம்…தோல்வியில் முடிகிறதா திருமண பந்தம்?…

Published on: May 15, 2024
gv prakash saindhavi
---Advertisement---

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இருவரும் மனமார காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருமே ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் துவக்கத்தில் மகிழ்ச்சியாக போனது மணவாழ்க்கை. இசையமைப்பாளராக பெயர் பெற்று பின்னர் நடிகராக மாறினார் ஜி.வி.

அதன் பிறகு தான் பிரச்சனைகள் துவங்கியதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக திரையில் மாறிய ஜி.வி. தனிப்பட்ட வில்லனாக மாற்றிப்பார்க்கக்கூடிய நிலை வந்ததாம். சைந்தவியின் தாயார் தனது மகளோடு மருமகனுடன் சேர்ந்து வாழ்வந்திருக்கிறார். இதுவும் கூட பிரச்சனைக்கு காரணமாக அமைந்ததாக சொல்லப்பட்டது.

உடலில் ஏற்பட்ட நோய் காரணங்களால் சைந்தவி ஒரு புறம் அவதியும் அடைதுள்ளார். இருவருக்கும் பெண் குழந்தையும் பிறந்து இன்பம், துன்பம் என இரண்டும் கலந்தே தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சிறு, சிறு பிரட்சனைகள அவ்வப்போது தலைதூக்க விஸ்வரூபமெடுத்தது விவகாரம். விவாகரத்து வரை யோசிக்க வைத்ததாம் இருவரையும்.

இசையமைப்பாளரின் என்பதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக மாறிய ஜி.வி.யின் வளர்ச்சியால் நாயகிகலின் நட்பும், நெருக்கமு,ம் அதிகரிக்க வீட்டிற்குள்ம் வெடிக்க துவங்கியது வெவேறு விதமான பிரட்சனைகள். மாமியார், மருமகனுக்கான மனஸ்தாபமும் பிரகாசின் வாழ்க்கையை திசை திருப்ப துவங்கியதாகவும் சொல்லப்பட்டது.

g.v.prakash saindhavi
g.v.prakash saindhavi

தனி மனித ரீதியாக இருவரும் தனித்தனி கொள்கைகளை கடைபிடித்து வந்தாலும் சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படத்துவங்கியதாம். இந்தால் கணவன், மனைவியிடையேயான பரஸ்பரமும் குறையத்துவகியிருக்கிறது. குழந்தையை மனதில் வைத்துக்கொண்டு இருவரும் மனக்கசப்புகளை தாண்டி வாழ்ந்து வந்திருக்கின்றனர் நலன் விரும்பிகளின் அறிவுரையை கேட்டு.

இந்த நிலையில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விமரணம்கலும் அதனால் அடைந்த மன உளைச்சலும் இருவரும் மனமொத்து பிரிவை அறிவிக்கும் நிலை வரை கொண்டு வந்து விட்டுருக்கிறது.இவர்களின் இந்த முடிவால் காதல் மணமுடித்த கலைத்துறையை சார்ந்தவர்கள் என்பதால் கோடம்பாக்கம் கலங்கித்தான் நிற்கிறதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.