---Advertisement---

பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் விசித்திரன் பட ரிலீஸ் தேதி

Published on: March 1, 2022
---Advertisement---

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் விசித்திரன்.

தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வித்தியாசமான வேடத்தை ஏற்றுள்ள இவர் இதற்காக 20 கிலோ எடையை கூட்டி இப்படத்தில் நடித்துள்ளார்.

வெறும் தண்ணீரை மட்டும் அதிகமாக குடித்து இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டுள்ளார் இவர்.

இந்த படம் மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் கடந்த 2018ம் ஆண்டு வந்தது அந்த படமே விசித்திரன் என்ற பெயரில் வருகிறது. இந்த படத்தை மலையாளத்தில் பத்மகுமார் என்பவர் இயக்கி இருந்தார் அவரே தற்போது தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார்.

அனைவரும் எதிர்பார்த்து வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.