---Advertisement---

மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது புகார்

Published on: June 30, 2021
---Advertisement---

தமிழில் தாரை தப்பட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்.கே சுரேஷ். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ஓரளவு பேசப்பட்டது. பிறகு மருது உள்ளிட்ட படங்களிலும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தர்மதுரை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இவரே. இவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா.ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சுமார் 13 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சூழ்நிலையில், 2018ஆம் ஆண்டு கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ராமமூர்த்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய 10 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கமலகண்ணன் அந்த தொகையை வாங்கி தருவதாக கூறி பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆர்.கே.சுரேஷ் ராமமூர்த்தியிடம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ராமமூர்த்திக்கு 10 கோடி ரூபாய் கடன் கிடைக்கவில்லை. ராமமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி வீனா.ராமமூர்த்திக்கு ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்துவைத்த கமலகண்ணன் தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பல முறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறும் வீனா. நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional compilation banner featuring actor Ravi Mohan's upcoming movie projects.

ரவி மோகனின் மிரட்டலான சினிமா லைன்அப்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள் – முழு விவரம்!

File photo of director Ganesh K Babu and actor Ravi Mohan for Karathey Babu.

ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட கதை: ரவி மோகனுக்காக மாறிய ‘கராத்தே பாபு’ – சுவாரஸ்யமான தகவல்!

Official production update banner for Sivakarthikeyan's upcoming film Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Official teaser launch banner for the thriller film Dhik Dhik Dhik.

ரகசியமும் ஆபத்தும் நிறைந்த ‘திக் திக் திக்’ டீசர்: நடிகர் ஆர்யா வெளியிட்ட மிரட்டலான வீடியோ!

Official trailer release announcement banner for Hiphop Tamizha's Meesaya Murukku 2.

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர் அப்டேட்: செப்டம்பர் 25-ல் ரிலீசாகும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

soori-salary-ravikumar-movie

சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!