---Advertisement---

பழைய ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்து நடிக்கும் சந்தானம்

Published on: September 14, 2020
---Advertisement---

தமிழ் திரைப்படங்களில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து நடிப்பது புதிய விசயமல்ல. சிலர் ரீமிக்ஸ் செய்கிறேன் என பழைய ஒரிஜினல் பாடலை கர்ண கொடூரமாக்கி விடுவார்கள். விதிவிலக்காக சில பாடல்களை அருமையான முறையில் படமாக்கி இருப்பார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமே.

 

நடிகர் சந்தானமும் தனது புதிய படத்தில் ஒரு பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து நடிக்கிறாராம். தனது டிக்கிலோனா படத்தில் 1990ம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன படமான மைக்கேல் மதன காமராஜனில் இருந்து பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறாராம்.

இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகும் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் , சித்ரா பாடிய அருமையான பாடல் இது. மேலும் டிக் டாக், ஸ்ம்யூல் போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பாடி, நடித்த  பாடி நடித்து கொண்டிருக்கும் ஆக்டிவான பாடல் ஆகும். பாடலின் ஃபீட் செமயாக இருக்கும்.இந்த பாடலை ரீமிக்ஸ் செய்கிறேன் என சொதப்பாமல் செய்தால் இசைப்பிரியர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்பது இசை ஆர்வலர்களின் கருத்து.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.