ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் உயிர்ப்பலிகளும் அதிகம். கடந்த சில வருடங்களாக இது போன்ற தாக்குதல்கள் அதிகம் இல்லை. இருப்பினும்
கடந்த திங்கட்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில்மீனவர்கள் தலைமன்னார் அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் என்பவர் காயமடைந்தார்.
இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திக் காயப்படுத்திய சம்பவம் சந்தோஷம் அளிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது பாராட்டுதலையும் தெரிவித்ததாக அவர் கூறி இருந்தார்.
இலங்கை அமைச்சரின் இந்த செயலுக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம் என மீனவர் அமைப்புகள் கூறியுள்ளனர்.






