நேற்று முன் தினம் சினிமாவுக்கான தேசிய விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. தமிழில் வெற்றிமாறன் , தனுஷ், விஜய் சேதுபதி, ,டி.இமான் போன்றோர் விருதுகள் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021







