மதுரையை சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் வைத்துள்ளார். மேலும் அன்புச்செழியனை தெரியாத சினிமாக்காரர்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான சினிமா விநியோகஸ்தராகவும் பைனான்சியராகவும் அன்பு செழியன் இருக்கிறார்.
இவர் தனது இல்ல திருமண விழாவை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இன்று சந்தித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த அவர் தனது இல்ல திருமணத்தில் கலந்து கொள்ளும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் திருமண அழைப்பிதழை இன்று வழங்கினார்.







